அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ள திரைப்படம் ‘குற்றம் புரிந்தால்.’
இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.கோகுல், இசை – கே.எஸ்.மனோஜ். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். ‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டிஸ்னி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தக் ‘குற்றம் புரிந்தால்’ படத்தின் முதல் பாடலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராம.நாராயணன் வெளியிட்டார்..!
அவரது அலுவலகத்தில் இன்று எளிமையாக நடந்த இந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் விஜயகாந்த் சுப்பையா, இயக்குநர் வீரா, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்..!
‘குற்றம் புரிந்தால்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வருகிறது.
Our Score









