full screen background image

“பாலியல் வழக்கில் ஆண்களை விட்டுவிடுவது ஏன்..?” – நடிகை குஷ்பூ கேள்வி..!

“பாலியல் வழக்கில் ஆண்களை விட்டுவிடுவது ஏன்..?” – நடிகை குஷ்பூ கேள்வி..!

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விபச்சார ரெய்டில் நடிகை ஸ்வேதா பாசு பிடிபட்டது குறித்தும், இதன் பின்பு மீடியாக்கள் அவரை குறி வைத்து எழுதியது குறித்தும் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பெண் என்பதாலேயே அந்த நடிகையின் புகைப்படத்தையும், பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி வரும் மீடியாக்கள்.. அந்தப் பெண்ணுடன் இருந்த ஆண்களை பற்றி எந்தச் செய்தியும் வெளியிடவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

இதோ இப்போது.. நடிகை குஷ்புவும் தனது டிவீட்டர் பக்கத்தில் இதனையே குற்றம் சாட்டியிருக்கிறார்.

“பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் ஏன் மறைக்கப்படுகிறது? அந்த ஆணுக்கும் இந்த குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே?”

“பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவை பெற்றதற்காக அந்த ஆண்மகனுக்கும் அதே இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.”

“ஒருவகையில் அந்த ஆணுக்கு கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து பாலின்பம் பெறுகிறார் அந்த ஆண்.”

குஷ்புவின் மேற்கண்ட கருத்துக்கள் ஏற்கக் கூடியவைதான்.. ஆனால் இந்த வழக்கில் போலீஸ் கொடுத்த செய்தியில் ஸ்வேதேபாசுவையும், அவருக்கு துணையாக இருந்தவரையும் மட்டுமே குறிப்பிட்டிருந்தார்களே ஒழிய.. அவருடன் இருந்த பிஸினஸ்மேன்களை போலீஸே அடையாளம் காட்டவில்லை.

இது ஆந்திர போலீஸாரின் கேடு கெட்ட செயல். இதற்கு மீடியாக்களை பலிகடாவாக்கக் கூடாது.. போலீஸ் வழக்கு ஒன்று பதிவான பின்பு அதனை வெளியிடுவது மீடியாக்களின் கடமை.. பொறுப்பு.. அது எந்த வகையான வழக்காக இருந்தாலும் தொடர்ந்து இதுதான் பின்பற்றப்படுகிறது.

சமீப காலமாகத்தான் பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களின் பெயர்களை வெளிப்பபடையாகச் சொல்ல வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வேண்டுகோளுக்கிணங்க மீடியாக்களும் அந்த வழக்குகளில் இதனை பின்பற்றி வருகின்றன.

இந்த ஸ்வேதாபாசு வழக்கில், ஆந்திர போலீஸார் இந்தப் பெண்ணுடன் இருந்த பிஸினஸ்மேன்களை காப்பாற்றிவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் பலிகடாவாக்கியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் முழு குற்றவாளி ஆந்திர மாநில காவல்துறைதானே தவிர மீடியாக்கள் இல்லை..

இதனையும் பிரபலங்கள் புரிந்து கொண்டால் சரி..!

Our Score