பாபி சிம்ஹாவுக்கு போக வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறித்த நடிகர் சித்தார்த்..!

பாபி சிம்ஹாவுக்கு போக வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறித்த நடிகர் சித்தார்த்..!

சென்ற ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘லூசியா’ திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் இசை வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் ஒரே நாளில் நடந்தன. இசை வெளியீட்டில் நடிகை சமந்தாவும் ஹீரோ சித்தார்த்துடன் வந்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவா “30 வருடத்திற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் அதே தலைப்பில் இப்போது சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த டைட்டிலில் நடிக்க பொருத்தமானவர்தான் சித்தார்த்…” என்று பாராட்டினார்.

நடிகை சமந்தா பேசுகையில், “சித்தார்த் எப்போதுமே சினிமாவைப் பற்றியே யோசிக்கக் கூடியவர். அதைப் பற்றியே முழு நேரமும் பேசிக் கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் ஒரு சினிமா பைத்தியம். அப்படிப்பட்டவர் ஒரு கதையில் நான்தான் நடிப்பேன் என்று இவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்றால், கண்டிப்பாக இந்த படத்தில் ஒரு வித்தியாசமான சித்தார்த்தை நாம் பார்க்கலாம்…” என்றார்.

நேற்றைய நாளின் மதிய நேரத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் சித்தார்த்.

“எனக்கு பிடித்த படங்களில் லூசியாவும் ஒன்று. இந்த படத்தை பார்த்தபோதே அந்த கதை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பி இயக்குநரிடம் கேட்டேன். அவர் இப்பத்தான் தயாரிப்பாளர் சி.வி.குமார் வாங்கிட்டுப் போனாருன்னு சொன்னார். உடனே சி.வி.குமார் ஸாரை கான்டாக்ட் செஞ்சு ‘இந்தப் படத்துல நான்தான் நடிப்பேன்’னு அடம் பிடிச்சு சொன்னேன்..

மேலும், இந்த படத்தின் இயக்குனரான பிரசாத் ராமர் ‘பீட்சா’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அந்த வகையில் நல்ல எக்ஸ்பிரீயன்ஸ் உடையவர். கன்னட ஒரிஜினாலிட்டியில் இருந்து கதையின் அடித்தளத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முற்றிலும் தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி படத்தை உருவாக்கியிருக்கிறார்.

அதனால் கன்னட ‘லூசியா’ல இருந்து தமிழ் ‘லூசியா’ இன்னும் வித்தியாசமாக இருக்கும். அதேபோல் நானும் கன்னடத்தில் புதுமுக நடிகர் நடித்ததுபோல் இல்லாமல் எனது பாணியில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்…” என்றார்.

இவருக்கடுத்து பேசிய தயாரிப்பாளர் சி.வி.குமார்.. “இந்த லூசியா படம் பத்தி கேள்விப்பட்டு படத்தை பார்த்தோம். இதைத் தமிழ்ல செய்யலாம்னு ஒரு யோசனை வந்துச்சு. அப்போ பாபி சிம்ஹாவை இதுல ஹீரோவா போட்டு எடுக்கணும்னு என்னோட ஐடியா..

இதுனால படத்தோட தயாரிப்பாளருக்கு போன் செஞ்சு தமிழ்ல அந்தப் படத்தை ரீமேக் செய்ய ரைட்ஸ் கேட்டோம். அந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக நானும், பாபி சிம்ஹாவும் பெங்களூர் போயி பேசி ரைட்ஸை வாங்கிட்டு திரும்பி வந்துக்கிட்டிருக்கும்போது சித்தார்த் போன் செஞ்சாரு..

‘அந்தப் படத்துல நான்தான் நடிக்கணும்’னு பிடிவாதம் பிடிச்சாரு சித்தார்த்.. பாவம் பாபி சிம்ஹா.. அவர்கிட்டயே இதைச் சொல்லிட்டாரு.. வேற வழியில்லாததால இப்போ சித்தார்த் இதுல நடிச்சிருக்காரு..” என்றார்.

கன்னட ‘லூசியா’ திரைப்படம் crowd funding எனப்படும் பல முதலீட்டாளர்களை ஒன்று கூட்டிய திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்தும் 110 தயாரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட 89 லட்சம் ரூபாயில்தான் படம் முதலில் துவக்கப்பட்டது. ஆனால் 71 லட்சத்திலேயே படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் பவன்குமார்.

படம் பல்வேறு வெளிநாட்டு பிலிம் பெஸ்டிவல்களில் திரையிடப்பட்டு அவார்டுகளை வாரிக் குவித்தது. இணையத்தின் மூலமாக நேரடியாக வெளியிட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது பி.வி.ஆர். நிறுவனம் தனது தியேட்டர்களில் லூசியாவை திரையிட முன் வந்தது. அப்படி திரையிடப்பட்டதில் பட்டென்று ஒரே நாளில் படம் ஹிட்டாகியது.

படத்தின் சேட்டிலைட்ஸ் உரிமையே 95 லட்சத்திற்கு விற்பனையானதாம். படத்தின் ஒட்டு மொத்த வருவாய் 4 கோடிகளுக்கு மேலாக கிடைத்தது.. படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை படத்திற்கா பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர் பவண்குமார்.

அதேபோல் இங்கேயும் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் நினைத்தாரோ தெரியவில்லை.. தன்னுடன் அபி கிரியேஷன்ஸ், மற்றும் ஒய்நாட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு படத்தைத் தயாரித்துள்ளார். படத்தை வருண் மணியனின் ரேடியன் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட இருக்கிறதாம்.

Our Score