full screen background image

‘டார்லிங்’ கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன குஷ்பூ

‘டார்லிங்’ கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன குஷ்பூ

நடிகர் கார்த்திக் இன்று தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு நடிகை குஷ்பூ தனது டிவீட்டர் பக்கத்தில் ஸ்பெஷலான பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்திருக்கிறார்.

அதில், “என் டார்லிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் நெருங்கிய நண்பர்.. என் முரளி.. என் கணவருக்கு அண்ணன்.. என் குழந்தைகளுக்கு அன்பான பெரியப்பா… கார்த்திக், நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு ஷ்பெஷலானவர். உங்களை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அது உங்களுக்கே தெரியும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக்கும், குஷ்பூவும் மிக நெருங்கிய நண்பர்கள். “நான் கார்த்திக்கின் மிகப் பெரிய ரசிகை” என்று குஷ்பூ பல முறை கூறியுள்ளார். குஷ்பூ கார்த்திக்குடன் நடித்திருந்த ‘வருஷம் 16’ படம்தான் குஷ்பூவுக்கு தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி நடித்த இன்னொரு படமான கிழக்கு வாசலும்’ பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

 
Our Score