பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்புதான். அந்த வகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில் நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது.
குறிப்பாக இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors என்ற நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.
குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில் நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப் பிரசாதமாகவே அமைந்துள்ளது.
லேட்டஸ்டாக பாலிவுட்டின் முன்னாள் நடிகையான ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோவரை குறைத்துள்ளார்.
சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில் நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேசும்போது, “அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில் நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில் நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.
எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில் நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோதுதான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரிய வந்தது. அதன் பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன்.
அது மிகப் பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.
அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக் கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது.
அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரிய வந்தது. அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.