விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது அதிகப் படங்களில் நடிப்பது யார் என்பதில் நடிகர் விஜய் சேதுபதிக்கும், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

விஜய் சேதுபதியின் கைவசம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை கை விரல்களின் எண்ணிக்கையையும் தாண்டி போயிருக்கிறது. அதேபோல் குறைவான சம்பளம், பந்தா செய்யாதது.. சின்ன வயது தோற்றம் இதெல்லாம் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் ப்ளஸ் பாயிண்ட்டாக இருப்பதால் அவரும் கை வசம் அதே அளவு படங்களை வைத்திருக்கிறார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் தன் கையில் ‘ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, ‘4ஜி’, ‘காதலைத் தேடி நித்யானந்தா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘பேச்சிலர்’, ‘வணக்கம்டா மாப்ளை’, மதிமாறன் புகழேந்தி இயக்கும் படம், ஹாலிவுட் படமான ‘டிராப் சிட்டி’ என்று கிட்டத்தட்ட 11 படங்கள் உள்ளது.

இதில் முதல் படமாக ‘வாடா மாப்ளை’ வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘பேச்சிலர்’, ‘ஜெயில்’ படங்களும் கியூவில் நிற்கின்றன. ‘4ஜி’ படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கும் வேலையையும் ஜி.வி.பிரகாஷ்குமார் செய்து வருகிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்பது தமிழ்ச் சினிமாவில் மட்டும் ‘நேரம் நன்றாக இருக்கும்போதே அள்ளிக் கொள்ள வேண்டும்’ என்பதாக மாறியுள்ளது..!

Our Score