full screen background image

6  இயக்குநர்கள், 4500  துணை  நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா  கிளம்பிட்டாங்கய்யா.’

6  இயக்குநர்கள், 4500  துணை  நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா  கிளம்பிட்டாங்கய்யா.’

ஹெவன் எண்ட்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா.’ 

இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ்,  ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார்,  மன்சூர் அலிகான்,  அனு மோகன்,  ராஜ்கபூர் ஆகிய இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி,  அஸ்மிதா,  ரத்திஷ்,  விஷ்வா, கண்ணன்,  ராஜ்,  திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், எழுத்து, இயக்கம் – ரஜாக்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, வேலை ஒன்று வருகிறது. இதைச் செய்து முடித்தால் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய தொகை கிடைக்கவிருக்கிறது. அதனால் இந்த வேலையை செய்து முடிக்கத் திட்டமிடுகிறார்கள் முதியவர்கள்.

அதோடு தங்களுடைய உதவிக்கு நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியையும் நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்களும் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா…?  இல்லையா…? என்பதே படத்தின் கதை.

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும்,  மன்சூர் அலிகான் காட்டுவாசி மனிதர்களின் தலைவராகவும், ‘பவர் ஸ்டார்’  சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தை திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

Our Score