“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..!

“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..!

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. 

‘கண்ணே கலைமானே’ படம் பார்த்துவிட்டு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

kannea kalaimaanea-poster-1

“இயக்குநர் சீனு ராமசாமி சார் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் சார் நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் பார்த்தேன். இது மிகவும் அன்பான, அழகான ஒரு திரைப்படம். படத்தில் இந்தச் சமூகத்துக்கு தேவையான ஒரு நல்ல கருத்துச் சொல்லப்பட்டிருக்கு.  அன்பைப் பற்றிய அழகான பார்வை இத்திரைப்படம்.

உதய் சார் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் முதல்முறையாக இப்படியொரு நடிப்பில் அவரை இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். ரொம்பவும் நிதானமாக, ரொம்பவும் அழகாவும் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களுமே வடிவுக்கரசி அம்மா, தமன்னா, ‘பூ’ ராமு சார் என்று அனைவருமே அற்புதமாக நடித்துள்ளார்கள்.

இந்த ‘கண்ணே கலைமானே’ ரொம்பவும் அழகான படம். வசனங்கள் எல்லாம் கூர்மையாவும், சிறப்பாவும் இருக்கு. நாம் மிகவும் ரசித்து பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம் ‘கண்ணே கலைமானே’.. மிஸ் பண்ணிராதீங்க..” என்று மனம் திறந்து வாழ்த்தியுள்ளார்.

Our Score