‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

J.S.B. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் J.S.B. சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘அசுர குரு.’

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ‘பாகுபலி’ சுப்பாராஜ், யோகிபாபு,  நாகி நீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

எழுத்து, இயக்கம் – ஏ.ராஜ்தீப், இசை – கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு – விசாரணை ராமலிங்கம், வசனம் – கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம், பாடல்கள்     – கபிலன் வைரமுத்து, பழநிபாரதி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

Asuraguru

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஏ.ராஜ்தீப் இயக்குநர் மோகன்ராஜாவிடம் இணை இயக்குநராகப் பயின்றவர். மேலும் இவர் சென்னையில் அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குதல் பிரிவில் பயின்று தங்க பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குநர் ராஜதீப் தமிழக அரசின் சிறந்த குறும் பட இயக்குநருக்கான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் படத்தின் டீஸரை அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்  வெளியிட்டார். ‘அசுர குரு’ படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் படக் குழுவினரை பெரிதும் பாராட்டியுள்ளார். இதனால் ‘அசுர குரு’ படக் குழுவினர் மிகுந்த மாகிழ்சியில் உள்ளனர்.

சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத்  போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இந்த ‘அசுர குரு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Our Score