full screen background image

நடிகை வேதிகா அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கும் ‘கஜானா’ படம்

நடிகை வேதிகா அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கும் ‘கஜானா’ படம்

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘கஜானா’.

ந்தப் படத்தில் யோகிபாபு, வேதிகா இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ்.

இதுவரை நடனத்திற்காக மட்டுமே பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் நடிகை வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகள் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளார்.

வேதிகா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.  

‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வருகிறது.

 
Our Score