full screen background image

‘வள்ளி மயில்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

‘வள்ளி மயில்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்து வரும் திரைப்படம் வள்ளி மயில்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா’ படப் புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, G.P.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு –  விஜய் சக்ரவர்த்தி, படத் தொகுப்பாளர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் AIM, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான்.

வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜீவா’ போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

1980-களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக இந்த வள்ளி மயில்’ திரைப்படம் உருவாகிறது.

திண்டுக்கல் மாநகரில் 1980 காலக்கட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்கும் வகையில்,  பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையை தொடர்ந்து டெல்லியிலும் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

படத்தின் ஃபர்ஸ்ட்  லுக்,  டீஸர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Our Score