full screen background image

இரு நண்பர்கள் அரசியலால் எதிரிகளாகும் ‘பூதமங்கலம் போஸ்ட்’ திரைப்படம்

இரு நண்பர்கள் அரசியலால் எதிரிகளாகும் ‘பூதமங்கலம் போஸ்ட்’ திரைப்படம்

சி.சி.வி.குரூப்ஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர்கள் பொன்கோ. சந்திரபோஸ், பொன்கோ.சந்திரசேகர், பொன்கோ.விஜயன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பூதமங்கலம் போஸ்ட்’.

ந்தப் படத்தில், விஜய் கோவிந்தசாமி, ராஜன் மலைச்சாமி, அஸ்மிதா, மோனிகா ரெட்டி, ராட்சசன்’ பசுபதி, மாஸ்டர் தக்சித் தேவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரேம்குமார் ஒளிப்பதிவையும், அர்ஜுன்-கே.ஆர்., கவின் இருவரும் இணைந்து இணைந்து இசையை மீட்ட, கவிஞானி பிறைசூடன், புதுக்கோட்டை பி.கே.சேகர் பாண்டியன் இருவரும் பாடல்களை எழுத, ஏ.எல்.ரமேஷ் படத் தொகுப்பையும், ஜாய் மதி நடனப் பயிற்சி இயக்கத்தையும், நாக் அவுட் நத்தா சண்டை பயிற்சி இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜன் மலைச்சாமி. இது இவர் இயக்கும் மூன்றாவது படமாகும்.

இந்தப் பூதமங்கலம் போஸ்ட் படம் பற்றி இயக்குநர் ராஜன் மலைச்சாமி பேசும்போது, “கிராமத்தில் இரு நண்பர்கள் உயிருக்கு உயிராய் பழகி வந்தனர். இவர்களின் நட்பை  ஊரே வியந்து பார்த்தது. காலப்போக்கில் இந்த நட்புக்குள் விதி புகுந்த. அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக் கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடை தாங்கி வரும் படம்தான் இந்த ‘பூதமங்கலம் போஸ்ட்’ படம்…” என்றார்.

சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

Our Score