full screen background image

“கைதி படத்தின் கதை என்னுடையது” என்கிறார் ராஜீவ் ரஞ்சன் என்ற கைதி

“கைதி படத்தின் கதை என்னுடையது” என்கிறார் ராஜீவ் ரஞ்சன் என்ற கைதி

2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் ‘கைதி’. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப் படம் தமிழில் அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளது. மேலும் இத்திரைப்படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதேபோல் இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தையும் தான் உருவாக்கப் போவதாக படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீர் அதிர்ச்சியாக இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், ஒரு கொலை வழக்கில் சிக்கி சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவர் சிறையில் கேட்ட சில சம்பவங்களை வைத்துஒரு கதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையை சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் ராஜன் என்பவரிடத்தில் சொல்லியிருக்கிறார். அந்த ராஜனின் உதவியால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் அந்தக் கதையைச் சொன்னாராம் ராஜீவ் ரஞ்சன்.

அந்தக் கதை பிடித்திருந்ததால் அதை படமாக்கலாம் என்று சொல்லி அவருக்கு 10 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தாராம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் அதன் பிறகு ராஜீவ் ரஞ்சனை எஸ்.ஆர்.பிரபு பட வேலைகள் தொடர்பாக அழைக்கவே இல்லையாம்.

இந்த நிலையில் சமீபத்தில்தான் ‘கைதி’ படத்தைப் பார்த்திருக்கிறார் ராஜீவ் ரஞ்சன். தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே ‘கைதி’ படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனால் “தனக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு 4 கோடி ரூபாய் தர வேண்டும். மேலும் தன் அனுமதியில்லாமல் வேற்று மொழிகளில் அந்தப் படத்தைத் தயாரிக்கக் கூடாது..” என்று கேரளாவின் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ராஜீவ் ரஞ்சன்.

அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி’ படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக் கூடாது…” என்று தடை விதித்துள்ளார்.

Our Score