full screen background image

நடிகை மெஹ்ரீன் பிர்சடாவின் திருமணம் ரத்தானது

நடிகை மெஹ்ரீன் பிர்சடாவின் திருமணம் ரத்தானது

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. இவர் தற்போது தெலுங்கில் ‘எப்-3’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் இடையில் சில காலமாக காதல் இருந்து வந்த நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தமும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. மணமகன் பவ்யா பிஷ்னோய் ஹரியானா மாநில முன்னாள் முதல்வரான பஜன்லாலின் பேரன்.

கொரோனா பிரச்னையால் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. கொரோனா விலகிய பிறகு மிகப் பிரம்மாண்டமாக தனது திருமணம் நடக்கும் என்று மெஹ்ரீன் பிர்சடா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென்று காதலர் பவ்யா பிஷ்னோய் உடனான தனது நிச்சயத்தார்த்தம் முறிந்துவிட்டதாக நடிகை மெஹ்ரீன் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “நானும், பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது.  எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி பவ்யா மற்றும் அவரது குடும்பத்தினரும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இனி வழக்கமான என் பணிகளை தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ரத்தானதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. மணமகன் மிகப் பெரிய அரசியல் குடும்பம் என்பதால் திருமணத்திற்குப் பின்பு மெஹ்ரீன் நடிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை மெஹ்ரீன் ஏற்காததால்தான் இந்த முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

Our Score