* பள்ளிப் பருவத்தில் மாநில அளவிலான இளைஞர் விழாவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் முதல் பரிசை வென்றார்.
* எர்ணாகுளத்தில் 1958-ல் நடந்த கேரள கத்தோலிக்க இளைஞர் விழாவின் பாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை.
* கான கந்தர்வன் – 1968, கேரள மகாகவி ஸ்ரீ.ஜி.சங்கர குருப் வழங்கி கவுரவித்தார்.
* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான கேரள மாநில விருது – 1969 (24 முறை பெற்றுள்ளார். பல்வேறு மாநிலங்கள் சார்பாக மொத்தம் 45 முறை).
* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது – 1972, 1973, 1976, 1982, 1987, 1988, 1991.
* பத்மஸ்ரீ – 1975
* கலைமாமணி – 1986
* அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் – 1986
* லதா மங்கேஷ்கர் விருது – 1993
* தேசிய குடிமகன் விருது – 1994, அன்னை தெரசா வழங்கி கவுரவித்தார்.
* லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு – 2001
* சங்கீத கலா சிகாமணி – 2002, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை.
* பத்மபூஷண் – 2002
* ரஞ்சனி சங்கீத கலா ரத்னா – 2002
* சப்தகிரி சங்கீத வித்வான்மணி – 2002, ஸ்ரீ தியாகராஜசுவாமிவாரி கோயில் அறக்கட்டளை, திருப்பதி.
* உடுப்பி ஆஸ்தான வித்வான் – 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் வித்யாதீஷ சுவாமிகள் வழங்கினார்.
* சுவாதி ரத்னம் விருது – 2002, சென்னை மலையாள கிளப்.
* சங்கீத கலா சுதாகரா – 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்.
* கொரம்பயில் அகமது ஹாஜி அறக்கட்டளை விருது – மத நல்லிணக்கத்தை பரப்பியதற்காக – 2003.
* ஜே.சி.டேனியல் விருது – 2003, மலையாள திரைப்பட பணியில் வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக, கேரள அரசு வழங்கி கவுரவித்தது.
* குட்டிகுரா கேலோபோல் விருது – 2004, வனிதா இதழ் சார்பில் வழங்கப்பட்டது.
* வாழ்நாள் சாதனையாளர் விருது – 2004, பிலிம்பேர் சார்பில், நேரு ஸ்டேடியம் – சென்னை.
* விஸ்டம் சர்வதேச விருது – 2005
* வாழ்நாள் சாதனையாளர் விருது – 2005, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வட இந்திய திரைத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
* சிட்னி ஓபரா ஹவுஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு – 2006
* சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது – 2006.
* உதயஷங்கர் நினைவு பிலிம் விருது – 2006, கன்னட சித்ரா சாகித்ய ரத்னா ஸ்ரீ உதயஷங்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
* கவுரவ உறுப்பினர் அந்தஸ்து – 2008, வான்கூவர் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா, கனடா.
* பிலிம்பேர் – வாழ்நாள் சாதனையாளர் விருது – 2009
* மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் – 2009.
* கேரள சங்கீத நாடக அகடமி விருது – 2010.
* சிஎன்என் ஐபிஎன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது – 2011, டெல்லி.
* பெப்கா அம்ரிதா பிலிம் விருது – 2011
* ஹரிவராசனம் விருது – 2012, சபரிமலை சந்நிதானம்.
* லிம்கா சர்வதேச விருது – 2012, ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு.