‘ரஜினி முருகன்’ திரைப்படம் 2016 பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கும் நிலையில் தனது புதிய படத்தை இன்று அறிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘தனி ஒருவன்’ வெற்றியைக் கொடுத்த இயக்குநர் ராஜாதான் சிவகார்த்திகேயனை இயக்கப் போகிறாராம். இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.
இதே 24 AM நிறுவனம் தற்போது தயாரித்துவரும் இன்னமும் பெரியடப்படாத படத்தில்தான் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். பி.சி.ீீீீராம் ஒளிப்பதிவு செய்ய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்தவுடன் உடனேயே ராஜாவின் படம் துவங்குமாம்..!
இது பற்றி பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை.
இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. இதுவே ஒரு சிறந்த இயக்குநருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம்.
குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும், வந்த ரசிகர்களை திருப்திபடுத்துவதிலும் அவருக்கென்று ஒரு தனிதன்மை உண்டு.
ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாக சிவகார்த்திகேயனும் இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்..’ என்றார்.