full screen background image

ரோபோ சங்கர் நடித்த ‘ஈகோ ராமன்’ திரைப்படம்!

ரோபோ சங்கர் நடித்த ‘ஈகோ ராமன்’ திரைப்படம்!

ஒரு மாணவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான்.

எதிர்பாராவிதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம் தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான்.

இதில் மாணவருக்கும், ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது.

இறுதியில் வென்றது ஆசிரியரா? மாணவனா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் கதையே ‘ஈகோ ராமன்’ திரைப்படம்.

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்
கதையின் முதன்மை பாத்திரமாக ரோபோ சங்கர் நடிக்க கதாநாயகன் நாயகியாக சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா நடித்திருக்கின்றனர்.

மேலும் கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன் ராஜ், லதா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாடல்கள் & இசை- ரெய்மன் ராட்ரிக்ஸ், பத்திரிக்கை தொடர்பு- வெங்கட், தயாரிப்பு- சுதா.ஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –
கணேசன் நாச்சிமுத்து.

இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாட்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளிலும் 45 நாட்களில் இருகட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

தற்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது.

இம்(மே)மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை திரையரங்குகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

Our Score