இன்று 2015 டிசம்பர் 11 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும் 2 டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.
திருட்டு ரயில்
SSS மூவிஸ் சார்பில் A.S.T.சலிம் மற்றும் அனு மூவிஸ் சார்பில் P. ரவிக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் ரக்சன், சரண் செல்வம் ஆகிய இரண்டு ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். மேலும் சென்றாயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, ஷண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, பசங்க சிவக்குமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஜயசெல்வன், இசை – ஜெயபிரகாஷ், பாடல்கள் – காமகோடியன், எடிட்டிங் – மாரிஸ், எழுத்து, இயக்கம் – திருப்பதி.
ஈட்டி
இதில் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்த்திருக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், செல்வா, முருகதாஸ், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் – நா.முத்துக்குமார், ஏகாதசி, அண்ணாமலை, எடிட்டிங் – ராஜாமுகமது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அரசு.
தென்னிந்தியன்
2011-ம் ஆண்டு வெளியான மெட்ரோ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் படம் இது. இதில் நவின் பாலி, பாவனா, சூரஜ் வஜ்ரமூடு, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் – மகேஷ் நாராயணன், ஷான் ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார். பிபின் பிரபாகர் எழுதி இயக்கியுள்ளார்.
மகதீரா
சென்ற ஆண்டு யெவடு என்கிற பெயரில் வெளியான தெலுங்கு படத்தின் டப்பிங் படம் இது. இதில் ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். எழுதி, இயக்கியவர் வம்சி.