ஜேம்ஸ் வசந்தன் என்றதும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்… ‘சுப்ரமணியபுரம்’ என்ற தனது முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹட் அடித்த இசை அமைப்பாளர் என்பது மட்டுமே நமக்கு தெரியும் . இந்த இசையமைப்பாளர் இப்போது ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அது மட்டுமல்ல… இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். இது முழக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடு்த்து எடுக்கப்படும் படமாம் .
இப்படத்தைப் பற்றி அவர் கூறியது.
“மியூசிக்கல் மூவி ஹாலிவுட்ல இருந்து நம்ம கோலிவுட்வரைக்கும் நிறைய வந்திருக்கறதா சொல்றாங்க. கேட்க இனிமையான பாடல்கள். பார்க்க அழகான இடங்களை கட்டினால் மட்டும் அது மியூசிக்கல் மூவி ஆகாது. அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளே தன் சொந்த குரலில் பாடி நடித்தால்தான் மியூசிக்கல் மூவி.
‘வானவில் வாழ்கை’ படத்தை அப்படியொரு படமாக உருவாக்கி வருகிறேன். இந்தப் படத்தில் மொத்தம் 19 பாடல்கள். கர்நாடிக், ஹிந்துஸ்தானி, வெஸ்டன், ராக், பாப் என இசையில் எத்தனை வகை இருக்கிறதோ அத்தனையும் இதில் இருக்கும். கதையும், திரைக்கதையும் நீங்கள் எதிர்பார்க்காத விதமாக இருக்கும்.. மொத்தத்தில் எனக்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமையும் என்று நம்புகிறேன்..” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
அவருடைய நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துவோம்..!