full screen background image

புராணக் கதையில் உருவாகும் ‘ஜம்பு மகிரிஷி’ திரைப்படம்

புராணக் கதையில் உருவாகும் ‘ஜம்பு மகிரிஷி’ திரைப்படம்

டி.வி.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி-பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜம்பு மகிரிஷி’.

இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல  இயக்குநரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சி இயக்கத்தையும், ராஜ் கீர்த்தி படத் தொகுப்பையும், பி.புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர். தேனிசை தென்றல்’ தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.

திருச்சி அருகே திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறு பேரை அனுப்பி மரபணு விதைகளை மாற்றிக் கொடுத்து தமிழகத்தில் விவசாயத்தை அழிக்க அனுப்புகிறது.

இதை தெரிந்து கொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை கதைக் களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கத்தில், 250 அடி உயர சிவன் சிலையை வடிவமைத்து அங்கே நடன குழுவினர் பங்கேற்றக… அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அரக்கன் வாதாவியாக பாகுபலி பிரபாகரும், அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக் காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

இந்த ‘ஜம்பு மகரிஷி’ படத்திற்கு தணிக்கையில் யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Our Score