‘S-3’ பிக்சரஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வசந்த் மகாலிங்கம், V.முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஜாம்பி’.
இந்தப் படத்தில் யோகி பாபு, ‘பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
யூ டியூப் ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்ட் படமான ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்த T.M.கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மனோபாலா, ‘கோலமாவு கோகிலா’ அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், ‘மியூசிக்கலி’ புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் கலை அமைக்க, தினேஷ் எடிட்டிங் செய்ய, ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்க, பாலா அன்பு இணைந்து தயாரிப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் புவன் நல்லான்.R இயக்குகிறார். இவர் ‘மோ’ என்ற படத்தை இயக்கியவர்.
அவரவர் பாணியில் வெவ்வேறு தளங்களில் காமெடிகளில் கலக்கி வரும் காமெடி நடிகர்களை இப்படத்தில் இணைத்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார் இயக்குநர் புவன் நல்லான்.R.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் துவங்கியது.
இப்படத்தின் கதை சென்னை பாண்டிச்சேரி ஈசிஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதால் படத்தின் பெரும் பகுதி ஈ.சி.ஆரில் உள்ள விடுதியைச் சுற்றிலுமே உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடல் காட்சி தவிர படத்தின் மற்றப் பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.