நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..!

நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..!

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய தற்போதைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்குள்ளானது. அதில், அவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவும் படுகாயமடைந்தார்.

அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை அவரது குடும்பத்தார் அனைவரும் கவனித்து வருகிறார்கள். நேற்றைக்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் அவருடைய இரண்டு கால்களும் முறிந்துபோய் மாவுக் கட்டு போடப்பட்ட நிலையில் படுக்கையில் படுத்திருக்கிறார் யாஷிகா.

அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாகவும், குடும்பத்தினர் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாஷிகா இன்னமும் குறைந்தது ஆறு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

Our Score