full screen background image

நடிகர் யோகி பாபு வெளியிட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பார்முலா

நடிகர் யோகி பாபு வெளியிட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பார்முலா

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓடிடி தளத்தில் சந்தானம்-யோகிபாபு  கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருந்தாலும் படத்தில் பல காட்சிகள் சிரிக்க வைத்திருக்கின்றன என்று சந்தானத்தை வெறுப்பவர்கள்கூட ஒத்துக் கொள்கிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு. புகழ் பெற்ற விஞ்ஞானி ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டின்’ என்ற பெயரில் அவர் செய்திருக்கும் குட்டிக் கலாட்டாவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

நேற்றைக்கு டிவிட்டர் ஸ்பேசசில் ‘டிக்கிலோனா’ படக் குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடினர்.

அப்போது அந்தக் குழுமத்தில் பேசிய யோகிபாபு, ”என்னைய போய் ஐன்ஸ்டீனா நடிக்க வெச்சிருக்காங்க. ஐன்ஸ்டீன் இப்போ உயிரோட இருந்திருந்தா, என்னைய செருப்பாலயே அடிச்சிருப்பாரு…” என்று நகைச்சுவையாகக் கூறினார். “அது மாதிரி எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி நானே அவரோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பேன்…” என்றும் யோகிபாபு சொல்லியிருக்கிறார்.

அப்போது படக் குழுவினர் “சயின்டிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் படம் உங்க டிக்கிலோனாவாத்தான் இருக்கும்…” என்று சொல்லி யோகிபாபுவை கிண்டலடித்தனர்.  

மேலும் பேசிய யோகிபாபு, “நான் ஏதோ ஃபார்முலாவை தப்பா சொல்லிட்டேன்னு எல்லாரும் பேசிக்குறாங்க. நான் ஐன்ஸ்டீனா நடிச்சதகூட ஏத்துக்குவாங்களாம். ஆனா, நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துக்க மாட்டாங்களாம். உண்மையில் அந்த ஃபார்முலா என்னுடைய கார் நம்பர்” என்று உண்மையை உடைத்தார்.

இதைக் கேட்டு மொத்தக் கூட்டமும் சிரித்தே செத்துவிட்டது..!

Our Score