full screen background image

சில நொடிகளில் – சினிமா விமர்சனம்

சில நொடிகளில் – சினிமா விமர்சனம்

லீகல் life-ல இல்லீகல் பார்ட்னர் வந்தால் என்னாகும் என்பதுதான் இந்த சில நொடிகளில் திரைப்படம்.

ஹீரோ ரிச்சர்ட் ஒரு ரிச் ஆன டாக்டர். அவர் தன் மனைவியோடு காஸ்ட்லியாக குடித்தனம் நடத்தி வருகிறார். ஆனால் மனைவி மீது அவருக்கு லவ்வும் இல்லை; லஸ்ட்டும் இல்லை. அதனால் அவருக்கு ஒரு சைடு உறவு தேவைப்படுகிறது. அப்படியான சைட் உறவாக வந்து வாய்க்கிறார் யாசிகா ஆனந்த்.

ஒரு இரவில் யாசிகா ஆனந்தோடு ரிச்சர்ட் குடியும், கூத்துமாக இருக்கும்போது தமிழ் சினிமா வழக்கப்படி மனைவி வந்து கொண்டிருக்கிறார்.

மனைவி வரும் முன்பாக காதலியை கிளம்பச் சொல்லி அவசரப்படுத்துகிறார் ரிச்சர்ட். ஆனால் யாசிகா ஆனந்த் போதை உச்சத்திற்கு சென்றதால் இறந்து விடுகிறார்.

இறந்துபோன யாசிகாவை ரிச்சர்ட் என்ன செய்தார்? மனைவியை எப்படி சமாளித்தார்? என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு கட்டத்தில் யாசிகா மரணத்தில் ஒரு பெரிய ட்விட்ஸ் நிகழ, அங்கிருந்து படம் க்ளைமாக்ஸை நோக்கி நகர்கிறது.

ரிச்சர்ட் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரிட்டையர்ட் டாக்டர் போல டயர்டாகவே இருக்கிறார். அவருடைய வழக்கமான செயற்கை நடிப்பு அவருக்கு இப்படத்தில் ஒரு மைனஸாக அமைந்துள்ளது.

அவரின் மனைவியாக நடித்திருக்கும் புன்னகைப் பூ கீதா நன்றாக நடித்துள்ளார். கிளைமாக்ஸில் அவரின் டான்ஸும், அவர் செய்யும் பல உடான்ஸும்தான் படத்தின் ஒற்றை பாசிட்டிவ் அம்சம்.

யாசிகா ஆனந்த் தனக்கு கொடுத்த பெரிய கேரக்டரையும், தனக்கு கொடுத்த சிக்கனமான உடையையும் நன்றாக உணர்ந்து பணியாற்றியுள்ளார். வாழ்க நீ எம்மாணி! ஏனைய துண்டு, துக்கடா கேரக்டர்கள் யாரும் மனதில் நிற்கவேயில்லை

படத்தை ஒளிப்பதிவாளர் மிகவும் கலர்புல்லாக காட்டியுள்ளார். பப் டான்ஸும் க்ளைமாக்ஸ் ஏரியாவும் அவரின் கேமரா வண்ணத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

இசை அமைப்பாளர் இன்னும் கொஞ்சம் எபெக்ட்டை போட்டிருக்கலாம். என்னதான் அவர் போட்டாலும், காட்சிகளும் அவருக்கு சப்போர்ட் செய்யணுமே! பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.

இல்லீகல் தொடர்பை வைத்து நகரும் கதை திரில்லிங்காகவும் இல்லாமல் எமோஷனலாகவும் இல்லாமல் போனது படத்தின் பெரும் மைனஸ்.

படத்தின் மொத்த கன்டெண்டும் ஒரு யூட்யூப் வீடியோ லெவலுக்கே இருப்பதால் முழு திரைப்படமாக சில நொடிகளில் உருமாறவே இல்லை.

கிளுகிளு காட்சிகளுக்கு மெனக்கெட்ட இயக்குநர், ஒரு உருப்படியான திரைக்கதையை உருவாக்கத் தவறிவிட்டார்.

அதனால் படம் மனதை விட்டு ஓடி விடுகிறது சில நொடிகளிலே!

RATING : 2.5 / 5

Our Score