விமான பணிப்பெண்ணை ஹீரோயினாக்கிய சிவகார்த்திகேயன்..!

விமான பணிப்பெண்ணை ஹீரோயினாக்கிய சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நாயகன் ரியோ ராஜுக்கு ஜோடியாக மாடலிங் அழகியான ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் மற்றும் சில பிரபலமான YouTube நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ஷபீர், ஒளிப்பதிவு – யு.கே.செந்தில் குமார், படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், சண்டை பயிற்சி – பிரதீப் குமார், ஆடை வடிவமைப்பு – தினேஷ், கலை இயக்கம் – கமலநாதன், எழுத்து, இயக்கம் – கார்த்திக் வேணுகோபாலன்.

தற்போது இந்தப் படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா.

shirin kaanchwaala 

“நான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி.

ஒட்டு மொத்த குழுவும் என்னிடம் மிகவும் நட்புடன் பழகினர். நான் இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர்.

ரியோ ராஜ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளைக்கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். இதே போன்று கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்…” என்றார்.

படத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது, இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என ஒட்டு மொத்தக் குழுவினரும் நம்புகிறார்கள்.

 

Our Score