கலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’

கலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’

வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம். எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும்  என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா..? 

அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும்..?

கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ‘இங்க என்ன சொல்லுது’ என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

actor jegan

பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட உள்ளரங்கில், பிரபல சினிமா நட்சத்திரமான நடிகர் ஜெகன், அவரது தனிப்பட்ட பாணியில் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி முழுக்க, முழுக்க யூகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மட்டுமின்றி நேயர்களான நீங்களும் இதில் பங்கேற்று உங்களின் யூகங்களின் முடிவை தெரிந்துகொண்டு உங்களை நீங்களே எடை போட, ‘இங்க என்ன சொல்லுது’ என்ற கலகலப்பும், விறுவிறுப்பும் கலந்த விளையாட்டு போட்டியை கண்டு களிக்கத் தவறாதீர்கள்.

வருகிற ஜூலை 21 முதல் ஞாயிறுதோறும் பகல் 12  மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ நிகழ்ச்சி அனைவருக்குமே வித்தியாசமான ஒரு பொழுதுபோக்காக அமையும்  என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Our Score