கடந்த 10 ஆண்டுகளாக அதிகமாக பெரிய பட்ஜெட் படங்களை விலைக்கு வாங்காமல் இருந்த கலைஞர் டிவி தற்போது மீண்டும் களத்தில் குதித்திருக்கிறது.
இந்தாண்டு முதல் பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமங்களை வாங்கப் போவதாக அறிவித்து அதற்கான வேலைகள் நடந்து வந்தன.
இதில் முதல் கட்டமாக தற்போது ஓடிடியில் வெளியாகி பரபரப்பை உண்டு செய்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தினை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதற்காக நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
Our Score