திரையுலகில் அறிமுகமாகும்போது அடக்கமாக இருப்பவர்கள்.. ஒரு சில படங்களில் நடித்து முடித்தவுடன் அலப்பறையை ஆரம்பித்துவிடுவார்கள்.
இவர்களுடைய பந்தாவையே வெளிக்காட்டிக் கொள்ளாமல் திரையிலும், திரைக்குப் பின்னாலும் மற்றவர்களின் கண்களுக்குப் படாமல் செய்து கொள்வார்கள்..
இமான் அண்ணாச்சி இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். முன்பு மக்கள் டிவியில் குழந்தைகளுக்கான புரோகிராம் நடத்திக் கொண்டிருந்தவர், திடீரென்று சன் டிவியில் அதிக சம்பளத்திற்கு கூப்பிட்டவுடன் பறந்தார்.
இ்ப்போதும் அங்கே மாலை நேரத்தில் அவர் நடத்தும் குழந்தைகளின் நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்பு. மறுக்க முடியாது..
அப்படியே நம்ம கேரியரை நிறுத்த முடியாதே.. மெல்ல சினிமாவுக்குள் காலடி வைத்தார். அவர் பேசுகின்ற திருநவேலி ஸ்லாங் அவருக்கு மிகப் பெரிய பலமாக இருக்க.. நிறைய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு புக்காகி டிவி நிகழ்ச்சிக்குக்கூட போக முடியாத அளவுக்கு பிஸியாகியிருக்கிறார்.
இப்போது அடுத்தக் கட்ட வளர்ச்சியாக தன்னுடைய பெயரை டைட்டிலில் போடும்போது “குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்” என்று போடும்படி வற்புறுத்துகிறாராம்..
இவரது நிபந்தனைகள் தற்போது வெளியாகியிருக்கும் ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ ஆகிய படங்களில் நிறைவேறியிருக்கிறது.
இனிமேல் அடுத்தடுத்து வரும் படங்களில் இப்படித்தான் வரும்போலவும் தெரிகிறது. ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு ஆசைப்படலாம்தான். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. திரையுலகிலும் நீடித்து இருக்க வேண்டும்..!
இமான் அண்ணாச்சிக்கு, இது இரண்டும் கிடைக்க வாழ்த்துகிறோம்..!
இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இன்னும் என்னென்ன பாடுபடப் போகிறதோ தெரியவில்லை..!?









