ரேடியோ மிர்ச்சியின் நிகழ்ச்சியை நிறுத்த இசைஞானி இளையராஜா கோரிக்கை

ரேடியோ மிர்ச்சியின் நிகழ்ச்சியை நிறுத்த இசைஞானி இளையராஜா கோரிக்கை

தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய உரிமையில்லாமல் சிடி, மற்றும் டிவிடிக்களில் பதிவு செய்து விற்பனை செய்வதை தடை செய்யக் கோரியும், அதுபோல் சிடி மற்றும் டிவிடிக்களை விற்பனை செய்யும் ஆடியோ நிறுவனங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றார் இசைஞானி இளையராஜா.

மேலும் கடந்த மாதம் முதலே தன்னுடைய பாடல்களின் முழு ராயல்டி உரிமையையும் பராமரிக்கும், விநியோகிக்கும் உரிமையை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினார் இளையராஜா.

இந்த ஒரு மாத்த்திலேயே சில கோடிகளில் ராயல்டி தொகை கிடைத்து.. அதனை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், இசைஞானி இளையராஜாவும் பகிர்ந்து கொண்டார்கள்.

அப்படியிருந்தும் சில ஆடியோ நிறுவனங்கள் தொடர்ந்து இந்த்த் திருட்டுத்தனத்தை செய்துவருவதை அறிந்து அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் சில எஃப்.எம். ரேடியோக்களில் இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலியில் நீங்க நான் ராஜா ஸார் என்கிற இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் நிறுத்தும்படி இளையராஜா சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.

அதேபோல் இனிமேல் தன்னுடைய பெயரை எங்கே, எதற்காகப் பயன்படுத்தினாலும் தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், தன் அனுமதியில்லாமல் தன் பெயரை எந்தவொரு வகையிலும் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து இசைஞானி இளையராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

 ilayaraja-radio mirchi

Our Score