full screen background image

வித்தியாசமான கதையுடன் வரவிருக்கும் ‘54321’ திரைப்படம்

வித்தியாசமான கதையுடன் வரவிருக்கும் ‘54321’ திரைப்படம்

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘54231’ .

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார்.

‘ரம்மி’, ‘தாண்டவக்கோனே’ படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னட வரவு பவித்ரா. ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் நாயகன் சபீர் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், ‘பசங்க’ சிவகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

“படத்தில் 5 பேர் பாத்திரங்கள், 4 விதமான லைப் ஸ்டைலில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழி தீர்த்தல் என்கிற 1-ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதுதான் கதை…” என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

‘காதல்’ புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர்  எடிட்டிங்- ரஜீஷ், ஸ்டண்ட் -திலிப் சுப்பராயன், கலை -ராம், நடனம் – ஷெரீப், பாடல்கள்.- நா, முத்துக்குமார். அட்மாஸ் மிக்ஸிங் – மந்த்ரா லேப், சவுண்ட் எபெக்ட்ஸ் – இக்பால், தயாரிப்பு மேற்பார்வை- ராஜ்குமார், தயாரிப்பு – ஜி,வி,கண்ணன், ராஜா

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள இந்த ‘54321’ படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன். ஸ்டார்ட்டும் துவங்கிவிட்டது. 

Our Score