full screen background image

ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்றச் சொல்லும் ‘இளமி’ திரைப்படம்..!

ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்றச் சொல்லும் ‘இளமி’ திரைப்படம்..!

‘ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்’ என்று  ‘இளமி’ திரைப்படத்தின் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் பேசினார்.

dsc_1205

‘சாட்டை’ யுவன், அனு கிருஷ்ணா இணைந்து நடித்திருக்கும் ‘இளமி’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் எம்.எம்.தியேட்டரில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக ‘கல்லூரி’ அகில், கிஷோர், ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜூலியன் பிரகாஷ்.

dsc_1226

முதலில் ‘இளமி’ படத்தின் பாடல் காட்சிகளும், டிரெயிலரும் திரையிடப்பட்டன. பாடல் காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் நடந்த கதை என்பதால் தேனி பக்கத்தில் இருக்கும் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் குடிசைகள் போட்டு நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து மிகப் பெரிய பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் ‘இளமி’ படம் பற்றி இயக்குநர் ஜூலியன் பிரகாஷ்  பேசும்போது, “18-ம்  நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் ஜல்லிக்கட்டுதான் மையக் கருவாக உள்ளது. அந்த  காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ‘வடம் ஜல்லிக்கட்டு’ இன்று அடியோடு அழிந்து விட்டது.

dsc_1256

ஜல்லிக்கட்டில் பல வகைகள் இருந்தாலும் ‘வடம்  ஜல்லிக்கட்டு’ என்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு. மற்ற ஜல்லிக்கட்டுக்களில் மாட்டின் முதுகைப் பிடித்து இழுத்து அதை நிறுத்துவதுதான் குறிக்கோளாக இருக்கும். ஆனால் இந்த வடம் ஜல்லிக்கட்டில் மாட்டை நேருக்கு நேராக சந்தித்து அதன் கொம்புகளில் கை வைத்து அடக்கிக் காண்பிப்பதுதான் வெற்றிக்கான அடையாளமாக இருந்தது.

முற்றிலும் அழிந்து போன இந்தக் கலையை இப்போது நாங்கள் இந்த ‘இளமி’ திரைப்படத்தின் மூலமாக மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம். இதன் மூலமாக இப்பொழுது தடை செய்யப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஒரு விடிவு பிறக்கும் என ஆணித்தரமாக நம்புகிறோம்.

இத்திரைப்படத்தை பார்க்கும்போது, 18-ம் நூற்றாண்டில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்குத் தெரியவரும். நம் முன்னோர்கள் ஜல்லிக்கட்டு காளையை தம் பிள்ளைகள் போல் நினைத்து பண்டுதம் பார்த்து, மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்நாளெல்லாம் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்து ஜீவ காருண்யம் பேணி வந்தார்கள். 

ilami audio function

அப்படி வளர்க்கப்பட்ட காளைகள்தான் இன்று அடி மாடுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. இப்போது அது கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு  காளைகளே இல்லை. அவைகளனைத்தும் அடிமாடுகளாக வலுக்கட்டாயமாக ஏற்றுமதி செய்யப்பட்டுக்  கொண்டிருக்கின்றன. 

மாடு பிடி வீரர்கள் வேதனையில் மருகிக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் ஐந்து ஆண்டுகளில்  இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்றால் நமது தமிழ்ச் சமூகத்தில் மாடு பிடி வீரர்களே இல்லாமல் போய் விடுவார்கள். ஜல்லிக்கட்டு என்ற கலை முற்றிலுமாக அழிந்து போய் விடும்.

நம் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேரான ஜல்லிக்கட்டு கலையை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்..?

சொந்தப் பணத்தை வைத்து, ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ‘இளமி’ திரைப்படத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்தக் கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்…” என்று ஆவேசப்பட்டார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஐந்து பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. அதில் ‘தீப்பறக்க முட்டிப் பாரு.. திமிலை நீயும் தொட்டுப் பாரு…’ என்று ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடலாசிரியர் ராஜாகுருசாமியின் வரிகளுக்கு ஆந்தக்குடி இளையராஜா பாடி இருக்கிறார். இது ஜல்லிக்கட்டின் தேசிய கீதமாக தமிழகமெங்கும் ஒலிக்கும்.

Our Score