இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் ‘மட்டி’(Muddy).
புதுமுக இயக்குநரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பி.கே.7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனுஷா சுரேஷ். அமித் சிவதாஸ் நாயர், ஹரீஷ் பெராடி, ஐ.எம்.விஜயன், ரெஞ்சி பணிக்கர், மனோஜ் கின்னஸ், சுனில் சுகாதா, ஷோபா மோகன், ஹாரி ஜோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, வசனம் – பிரகபால், மகேஷ் சந்திரன், நாத் நாயக், வசனம் – ஆர்.பி.பாலா, நடன இயக்கம் – பிரகபால், இசை, பின்னணி இசை – ரவி பாசூர், படத் தொகுப்பு – சான் லோகேஷ், ஒளிப்பதிவாளர் – கே.ஜி.ரத்தீர், கலரிஸ்ட் – ரங்கா, முதன்மை இணை இயக்குநர் – நிதின் சி.சி.ரேபியட், இணை இயக்குநர்கள் – ஹரிசுதன் மேப்புரா. அகில், புகைப்படங்கள் – சிபி சிவதாஸ் , சண்டை இயக்கம் – ரன் ரவி, உடைகள் வடிவமைப்பு – அருண் மனோகர், ஒலிக் கலப்பு – நந்து ஜெ. ரேஸ் டிராக் டிஸைனர் – யோகேஷ் ஆர்ட் டிபார்ட்மெண்ட், ஸ்பாட் எடிட்டர் – லிபின் லீ, சாதீக், போஸ்ட் புரொடெக்சன்ஸ் மேனேஜர் – கார்த்திக், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – என்.கே.தேவராஜ், டி.ஐ. – IGNG Studio, VFX – D Note, Studio and DRM Publicity,.
இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
இயக்குநர் பிரகபல் பேசும்போது.. “இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன் என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது.

மேலும், படம் நன்றாக வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன. ஆக்ஷுவலா இந்தப் படத்தில் எடிட்டிங். கேமரா, மியூசிக், CG உள்பட டெக்னிக்கல் வொர்க் அதிகம். 14 கேமராக்கள் வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இது என்னோட பர்ஸ்ட் ப்ராஜெக்ட். ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன்..” என்றார்.

வசனகர்த்தா R.P.பாலா பேசும்போது, இந்தப் படத்திற்கு வாய்ப்பு தந்த கார்த்திக் அண்ணாவுக்கு நன்றி. இயக்குநரை முதலில் சந்தித்தபோது ரா புட்டேஜை காட்டினார். நான்கு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் புராஜெக்டை உருவாக்கி இருக்கிறார்கள். எடிட்டர் ஜான் லோகேஷ், ‘ராட்சசன்’ படத்தில் மிரட்டி இருந்தார். அந்தப் படத்தைவிட இந்தப்படத்தில் அதிகமாக உழைத்திருக்கிறார். எல்லோரும் மிகச் சிறப்பாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மியூசிக் டைரக்டர் மிரட்டி இருக்கிறார். ட்ரைலர் எந்தளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கோ. அதே பிரமிப்பு படத்திலும் இருக்கிறது…” என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ் பேசும்போது, “இந்த ‘மட்டி’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ‘ராட்சசன்’ படம் முடித்த பின் எனக்கு மாலிவுட்ல இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்ன போது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது.
இந்தப் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப் படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன் ட்ரெஸ்டாக இருந்தது.
இயக்குநரிடம் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக பண்ணலாம் என்று சொன்னேன். இயக்குநர் நிறைய டைம் கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது.
5 மொழியில் படம் வந்திருக்கிறது. கண்டிப்பாக படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன்…” என்றார்.