full screen background image

‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யாக வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘தில்லு இருந்தா போராடு’

‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யாக வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘தில்லு இருந்தா போராடு’

கே.பி. புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.பி.பிரசாத் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.

இந்தப் படத்தில் கார்த்திக் தாஸ், அனு கிருஷ்ணா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.

மேலும், யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ, லொள்ளு சபா’ மனோகர், ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும், எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீவிஜய், சதீஸ்காந்த் மூவரும் பாடல்களையும், வெங்கட் தயாரிப்பு மேற்பார்வையையும், மின்னல் முருகன் சண்டை பயிற்சியையும், எடிசன், ஜாய் மதி, சாய் கேசவ் மூவரும் நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா மூவரும் இணை தயாரிப்பையும், ஆர்.பி.பாலா, எஸ்.கே.முரளிதரன், எம்.மணிவண்ணன் மூவரும்  நிர்வாகத் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

பல முன்னனி இயக்குர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள எஸ்.கே.முரளீதரன்  இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக  அறிமுகமாகிறார். 

 

இந்தப் படம் குறித்து இயக்குநர் முரளீதரன் பேசும்போது, “பட்டப் படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு  கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான்.

இதைப் பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன் பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. அப்போது அவனுக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யின் உதவியும் கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் இந்த தில்லு இருந்தா போராடு…” என்றார்.

Our Score