full screen background image

“கேப்’பும் இல்லை; ‘ஆப்’பும் இல்லை; என்னிக்குமே நான் ‘டாப்பு’தான்..! – வடிவேலுவின் காமெடி பேச்சு

“கேப்’பும் இல்லை; ‘ஆப்’பும் இல்லை; என்னிக்குமே நான் ‘டாப்பு’தான்..! – வடிவேலுவின் காமெடி பேச்சு

மெட்ராஸ் எண்ட்டெர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘கத்தி சண்டை’.

இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

img_9433

இந்த விழாவில் தயாரிப்பாளர் நந்தகோபால், ஹீரோ விஷால், இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு, இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசும்போது, “ரொம்ப இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நான் நடிச்சிருக்கிறதா பலரும் சொன்னாங்க. உண்மையில் எனக்கு ‘கேப்’பே கிடையாது. எனக்கு ‘கேப்’பும் கிடையாது. ‘ஆப்பு’ம் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு ‘டாப்பு’தான். அதற்கு காரணம் மக்கள்தான்.

img_9530

வாட்ஸ்அப், அரசியல், பேப்பர்ன்னு எல்லாத்துலேயும் இந்த வடிவேலு இருக்கான். நான் பேசின டயலாக்குகளை வைச்சுதான் எல்லா இடத்துலேயும் பலருக்கும் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. நான் மக்களிடையேதான் இன்னமும் இருக்கிறேன். எங்கேயும் போகலை. தினமும் அவங்க என்னை பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க. நான் இல்லாமல் அவங்க இல்லை. அவங்க இல்லாமல் நானும் இல்லை. மக்கள்கிட்ட இருந்த விஷயங்களைத்தான் நான் எடுத்து காமெடியா அவங்ககிட்டேயே கொடுத்துருவேன்.

img_9560

எங்க அப்பத்தா இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால செத்துப் போச்சு.. ஒரு தடவை அதைப் பார்க்க நான் போயிருந்தேன். ‘ஏம்பா… வடிவேலு எதுல வந்த?’ன்னு கேட்டுச்சு. ‘பிளைட்ல வந்தேன்’னு சொன்னேன். ‘காசு எவ்வளவு ஆச்சு?’ன்னு கேட்டுச்சு. ‘நாலாயிரம் ரூபா’ன்னேன்.. ‘எம்புட்டு நேரமாச்சு?’ன்னு கேட்டுச்சு. ‘அரை மணி நேரத்துல மதுரைல கொண்டாந்து இறக்கிட்டாங்க’ண்ணே.. ‘அட நாசமாப் போறவனே.. உன்னைய நல்லா ஏமாத்திப்புட்டானே..? 150 ரூபா கொடுத்தா டிரெயின்ல 10 மணி நேரம் உன்னைய படுக்க வைச்சு கூட்டியாந்து விடுறான். இவன் அரை மணி நேரத்துக்கு, நாலாயிரம் ரூபாயை புடிங்கியிருக்கான். அவன் உன்னைய நல்லா ஏமாத்திட்டான். பிளைட்டுகாரனை வெளக்கமாத்தால அடிச்சு காச புடுங்கு’ன்னுச்சு. என்ன பதில் சொல்வீங்க..? நான் இதை எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னு தெரியலை.  ஆனால் கிழவி ரொம்ப லாஜிக்கா பேசுதுன்னு சொல்லி அப்படியே பேசி சமாளிச்சேன்.

ஒருத்தன் ரோட்டுல மயங்கிக் கிடந்திருந்தான். போற, வர்றவனெல்லாம் பார்த்திட்டு சட்டுன்னு ஓடிறானுக. ஒருத்தன் வந்தான். பார்த்தான். பார்க்க பாவமா இருக்கானேன்னு யோசிச்சான். உடனே ஓடிப் போய் ஒண்ணா ரூபாய்க்கு சோடா வாங்கிட்டு வந்து அவன் மூஞ்சில தெளிச்சு எழுப்பிவிட்டான். எந்திரிச்சவன், கண்ணு முழிச்சவுடனேயே எழுப்பிவிட்டவனை ஓங்கி அடிச்சிட்டான். ‘என்னைய ஏண்டா அடிக்கிற?’ன்னு அவன் கேட்டதுக்கு, ‘ஏண்டா முட்டாப் பயலே.. நானே ஐயாயிரம் ரூபாய்க்கு ஹெராயினை வாங்கி ஏத்திட்டு மயங்கிக் கிடக்கிறேன். என்னைய போயி எழுப்பி விட்டுட்டியே’ன்னான்.. இப்பல்லாம் ரோட்டுல ஒருத்தன் மயங்கிக் கிடந்தால்கூட அவன் போதைல இருக்கான்னு நாம நினைச்சுக்க வேண்டியதுதான். நாடு இன்னிக்கு இப்படித்தான் இருக்கு..!

img_9478

மக்களிடையே என்ன நடக்கிறதோ.. அதைத்தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்திருக்கிறேன். நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதுக்கு காரணம் இந்த தமிழக மக்கள்தான். என்னை ‘லெஜண்ட்’ என்கிறார்கள். அதுக்கு என்ன அர்த்தம்ன்னுகூட எனக்கு தெரியாது. எனக்கு இங்கிலீஷ்ல ஒத்த வார்த்தை பேசத் தெரியாது. என்னுடைய பலம் என்ன என்பதும் எனக்குத் தெரியாது. யானைக்கு தன்னோட பலம் தெரிஞ்சுட்டா அது வேற மாதிரி ஆயிரும்.

நானும் இருபத்து நாளு மணி நேரமும் சினிமாவை பத்திதான் நினைச்சுக்கிட்டிருக்கேன். நான் வாய்ப்பில்லாமல் சும்மா வீட்ல உட்காரலை. வந்த படங்களின் கதை சரியில்லாமல் இருந்த்தால்தான் நிறைய படங்களை ‘வேணாம்’ன்னு சொல்லிட்டேன். அந்தச் சமயத்தில் நிறைய கதைகளைக் கேட்டேன். அப்படி கேட்ட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைதான் இந்த கத்தி சண்டை.

சுராஜ் போன்லதான் கதை சொன்னார். ‘என்னோட கேரக்டர் என்ன?’ன்னு கேட்டேன். ‘டாக்டர் கேரக்டர்’ என்றார். ‘அப்படீன்னா டுபாக்கூர் டாக்டரா?’ என்றேன். ‘டுபாக்கூர் மாதிரியே இருக்கும். ஆனா டுபாக்கூர் கிடையாது’ன்னார். ‘சரி.. பண்றேன்’னு சொல்லிட்டேன்.

img_9439

‘கத்தி சண்டை’ன்னு சொன்னாப்புல இந்தப் படம் கத்தி எடுத்து சண்டை போடுற படமில்லை. கத்திப் பேசுற சண்டை படமும் இல்லை. இது புத்தி சண்டை படம்.

மொதல்ல விஷாலுடன் திரையில் ‘திமிரு’ படத்துல நடிச்சேன். படம் சூப்பர் ஹிட்டு.. இரண்டாவதா தரைல ‘நடிகர் சங்கத்த காணவில்லை’ங்கற படத்துல நடிச்சேன். அந்தத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல் மாதிரி நடந்தது. மக்கள் ஆதரவால் அதுவும் அமோக வெற்றி. மூணாவதா இந்த ‘கத்தி சண்டை’ படத்துல நடிச்சிருக்கேன். இதுவும் கண்டிப்பா வெற்றி பெறும். இந்தப் படத்தைத் தப்பித் தவறிகூட திருட்டு டிவிடில பார்க்காதீங்க. திருட்டுப் பயலுக சகவாசம் நமக்கு எப்போதுமே வேணாம்..” என்றார்.

Our Score