full screen background image

“அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..” – பாடகி ஜொனிதா அறிவிப்பு..!

“அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..” – பாடகி ஜொனிதா அறிவிப்பு..!

“அனிருத்தை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக” அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் பாடகி ஜொனிதாவே கூறியிருக்கிறார்.

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக அனிருத் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே அனிருத்தின் திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் பத்திரிகைளில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

முதலில் ஆண்ட்ரியா என்றார்கள். பின்பு “அதுவொரு கனவு போல.. தொடங்கியவுடனேயே கலைந்துவிட்டது” என்று அனிருத்தே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

பின்பு கீர்த்தி சுரேசுடன் காதல் என்று பேசப்பட்டது. அதுவும் இல்லை என்று இரு தரப்பினராலும் சொல்லப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விளையாட்டு வீராங்கனை ஒருவருடன் அனிருத் இணைத்து பேசப்பட்டார். அந்தத் தகவலும் உண்மையில்லை என்று தெரிய வந்தது.

இந்த மாத கிசுகிசுவாக மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்துப் பெண்ணை மணக்கிறார் அனிருத் என்றும் தகவல்கள் வெளியாகின. தமிழ் டிவி சேனல் ஒன்றின் உரிமையாளர் மகள்தான் அந்த மணம கள் என்றார்கள். எதுவும் உறுதியாகவில்லை.

கடைசியாக பிரபல பாடகியான ஜொனிதாவுக்கும், அனிருத்துக்கும் காதல் என்று முடிச்சுப் போட்டுவிட்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இந்தச் செய்திதான் ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் படங்களிலெல்லாம் தவறாமல் இடம் பெறும் முக்கியமான பாடகியாக இருக்கிறார் ஜொனிதா காந்தி. இதனால் அனிருத் – ஜொனிதா இடையே காதல் என்றும் பேசப்படுகிறது.

இதற்கிடையில் அனிருத் குறித்து பாடகி ஜொனிதா காந்தி கூறிய பதில், தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி ஜொனிதா காந்தியிடம், “சூர்யா, ரன்வீர் சிங், அனிருத்… இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்…?” என்று கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜொனிதா காந்தி, “இந்த மூன்று பேரில் அனிருத்துக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் நடக்கவில்லை. அதனால் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்…” என்று கூலாக பதிலளித்துள்ளார்.

ஆக.. இந்தக் காதல் கிசுகிசு உண்மைதானா என்று அனிருத்தின் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

Our Score