தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘இடி முழுக்கம்’.
இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், சரண்யா பொன்வண்ணன், M.S.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று’ மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அழகான வாழ்வியலை கண் முன்னே கொண்டு வருவதில் வல்லவரான இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 13-ம் தேதி வெளியாகும் என்ற இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.









