full screen background image

தலித் அரசியலை கருவாகக் கொண்ட ‘விஜயன்’ திரைப்படம்

தலித் அரசியலை கருவாகக் கொண்ட ‘விஜயன்’ திரைப்படம்

அறிமுக இயக்குநரான எஸ்.டி.புவியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விஜயன்’ என்ற படம் 39 நாடுகளில் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்தவர், எஸ்.டி.புவி. இவர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விஜயன்.’

கூலிக்கு கொலை செய்யும் கூலிப்படை தலைவனை முக்கிய கதாப்பாத்திரமாக கொண்ட படம் இது. புதுமுகங்கள் பாரி, கார்த்திகேயன், யோகி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

“தலித் அரசியலை கருவாகக் கொண்ட படம் இது. புதிய வகை திரைக்கதையும், தொழில் நுட்பமும் மற்ற படங்களில் இருந்து இந்தப் படத்தை வேறுபடுத்திக் காட்டும். இந்தப் படம் இதுவரையிலும் 39 நாடுகளின் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது” என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்களான சுப்பிரமணிய சக்கரை, தொல்காப்பிய புவியரசு, செந்திலரசு.

Our Score