“நிர்வாணக் காட்சியில் நடித்தது எப்படி..?” – நடிகையின் விளக்கம்..!

“நிர்வாணக் காட்சியில் நடித்தது எப்படி..?” – நடிகையின் விளக்கம்..!

2005-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘தன்மந்த்ரா’ திரைப்படம் அந்தாண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையே பெற்றது. மேலும் கேரள அரசு வழங்கிய திரைப்பட விருதுகளில் நான்கை இந்தப் படம் பெற்றது. பிலிம்பேர் விருது, ஏசியாநெட் விருது, வனிதா விருது என்று அந்த வருடத்திய அனைத்து விருதுகளையும் வாரிக் குவித்திருந்தது.

இந்தப் படத்தில் மோகன்லாலும், மீரா வாசுதேவனும் நடித்திருந்தனர். பிளெஸ்ஸி எழுதி, இயக்கியிருந்தார். மோகன்லால் இந்தப் படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியாக நடித்திருந்தார். அவருடைய பண்பட்ட நடிப்பினால் சிறந்த நடிகருக்கான விருதுகளை வாங்கிக் குவித்திருந்தால் மோகன்லால்.

இவருக்கு ஜோடியாக நடித்திருந்த மீரா வாசுதேவனுக்கு இதுதான் முதல் மலையாளத் திரைப்படம். 2003-ம் ஆண்டு ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியிருந்தார் மீரா வாசுதேவன்.

இந்த ‘தன்மந்த்ரா’ படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியில் மோகன்லால், மீரா வாசுதேவன் இருவருமே நிர்வாணமாக நடித்திருந்தார்கள். இது அந்தப் படம் வந்த புதிதில் அதிகமாகப் பேசப்பட்ட விஷயமாகும்.

இந்தக் காட்சியில் நடித்தது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நடிகை மீரா வாசுதேவன்.

அவர் இது பற்றிப் பேசுகையில், “அந்தக் காட்சியை எடுக்கும்போது நான் இயக்குநரிடம் குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே அந்த அறையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அதுபோலவே மோகன்லால், நான், கேமிராமேன், எனது ஒப்பனை கலைஞர்கள் ஆகிய நால்வர் மட்டுமே அந்தக் காட்சியின்போது அந்த அறையில் இருந்தோம்.

அந்தக் காட்சி படமாகும்போது நாங்கள் எப்படியிருந்தோம் என்பதே தெரியாத அளவுக்கு எங்களிடத்தில் நடிப்பினை வரவழைத்திருந்தார் இயக்குநர் பிளெஸ்ஸி.

இண்டர்வெல் பிளாக்கில் ஒரு முக்கியமான விஷயத்தை இயக்குநர் ரசிகர்களுக்கு இந்தக் காட்சி மூலமாக உணர்த்தியிருந்தார்.

லாலேட்டனின் அற்புதமான நடிப்பினாலும் என்னுடைய பதில் நடிப்பினாலும் அந்தக் காட்சியில் நாங்கள் நிர்வாணமாக நடித்திருந்தோம் என்பதே ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

இத்தனையாண்டுகள் கழித்து இணையத்தில் இந்தக் காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பற்றிப் பேசுகிறார்கள்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை மீரா வாசுதேவன்.

Our Score