பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் ஒரு நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஸ்டாண்ட்-அப் காமடி செய்வதிலும் வல்லவர். பல திரைப்பட விழாக்களில் தனிப்பட்ட காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நிகழ்வினை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்தப் பேச்சில், “ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுவார்கள். ஆனால் எனக்கு அந்தப் படத்தில் கடைசிவரை கல்யாணமே நடக்காது.
இந்த வரிசையில் ஷாலினி, லைலா, ராணி முகர்ஜி ஆகியோர்களை நான்தான் தானம் செய்து தந்திருக்கிறேன். நயன்தாராவுக்கு இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது என்றால் அதற்கும் நான்தான் காரணம்…” என்று பேசியுள்ளார்.

தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் குமாருக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கதை நகரும். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நயன்தாராவை தனுஷ் திருமணம் செய்து கொள்வார். இந்தக் கதையை வைத்துதான் கார்த்திக் குமார் இப்படி பேசியதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.