மலையாள நடிகை ஹனிரோஸின் தைரியமான பிரெஞ்ச் கிஸ்..!

மலையாள நடிகை ஹனிரோஸின் தைரியமான பிரெஞ்ச் கிஸ்..!

மலையாள நடிகையான ஹனிரோஸ் ‘ஒன் பை டூ’ என்ற மலையாளப் படத்தில் கொடுத்திருக்கும் பிரெஞ்ச் கிஸ் சீனை சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. சக நடிகர் முரளி கோபியின் இதழோடு இதழ் சேர்த்து ஆங்கில பட டைப்பில் கொடுக்கப்பட்டு, வாங்கப்பட்டிருக்கும் முத்தங்கள் ரொம்பவே அதிகம்தான்.

ஏற்கெனவே மலையாளத்தில் புதிய அலை இயக்குநர்களின் கைவண்ணத்தில் கலாச்சாரம் மீறிய பதிவுகளும், காட்சிகளும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு முன் ‘சப்பா குரூஸ்’ திரைப்படத்தில் ரம்யா நம்பீசனிடத்தில் பகத் பாசில் பெற்ற முத்தமும், ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியாவிடம் இருந்து பகத் பாசில் பெற்ற முத்தத்தையும்கூட இந்த ஹனிரோஸின் மு்ததம் தோற்கடித்துவிட்டது..!

இந்த ஹனிரோஸ் தமிழில் ‘காந்தர்வன்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்தார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரஸ்மீட் நிகழ்ச்சிகளுக்குக்கூட அவர் வரவில்லை.. 

இந்த முத்தக் காட்சி பற்றி பேசியிருக்கும் ஹனிரோஸ் “முதல்ல நான் எந்த வட்டத்துக்குள்ளேயும் சிக்க விரும்பலை. இந்த முத்தக் காட்சி முழுக்க முழுக்க அந்த கேரக்டருக்காக செய்யப்பட்டது. அதில் தப்பில்லைன்னு எனக்குத் தோணுச்சு.. நடிச்சேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லர் டைப் படமான இது வெளியாகி படுதோல்வியைச் சந்தித்துவிட்டது.. இந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் நம்ம எழுத்தாளர் ஜெயமோகன் என்பது கூடுதல் தகவல்.

Our Score