full screen background image

பிலிம் சேம்பர் தேர்தல் – கேயார் முடிவை புறக்கணித்த தமிழ்த் தயாரிப்பாளர்கள்..!

பிலிம் சேம்பர் தேர்தல் – கேயார் முடிவை புறக்கணித்த தமிழ்த் தயாரிப்பாளர்கள்..!

நேற்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்த சபை தேர்தலில் தமி்ழ் தவிர மற்ற மொழி உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தலைவராக மலையாளப் படவுலகைச் சேர்ந்த சசிகுமார் வெற்றி பெற்றிருக்கிறார். தெலுங்கு படவுலகத்தைச் சேர்ந்த கட்ரக்கடா பிரசாத் செயலாளராகவும், தமிழ்ப் படவுலகின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்டூடியோ அதிபர்கள் சார்பில் போட்டியிட்ட ரவிபிரசாத் யூனிட் உரிமையாளர் செங்கையாவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தமுள்ள 2085 வாக்குகளில் 1121 வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ் வாக்காளர்களில் வெறும் 45 பேர்தான் வாக்களிக்கவில்லையாம். மீதமுள்ளவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்திருக்கிறார்கள். ரஜினி பிராக்சி முறையில் வாக்களித்தார். கமல் நேரில் வந்திருந்தார். நடிகர் விஜய் சார்பில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வந்து வாக்களித்தார்.

தேர்தலை புறக்கணிப்போம் என்ற கேயார் தலைமையிலான டீமின் போர்க்குரலை, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களே புறக்கணித்துவிட்டார்கள்.. 90 சதவிகித தமிழகத்து உறுப்பினர்கள் வாக்களித்துவிட்டதால் பிலிம் சேம்பர் நிர்வாகிகள் புன்னகையுடன் இருக்கிறார்கள்.

தமிழுக்கென்று தனி சேம்பர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த நம்மவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதை இந்தத் தேர்தலும் காட்டிக்கொடுத்துவிட்டது..

தமிழனுக்கு தமிழனேதான் எதிரி.. வேறு யாருமில்லை..!

Our Score