full screen background image

இனியா – கார்த்தீஸ்வரன் நடிக்கும் ‘எர்ரர்’ திரைப்படம்

இனியா – கார்த்தீஸ்வரன் நடிக்கும் ‘எர்ரர்’ திரைப்படம்

‘திலகா ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘Error.’

இந்தப் படத்தின் நாயகனாக ‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் ஹீரோவான கார்த்தீஸ்வரன் நடிக்கிறார். நாயகியாக இனியா நடிக்கிறார். இனியா மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார்.

இசை – பிரேம்ஜி அமரன், ஒளிப்பதிவு – விவேக். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஜி.பி.கார்த்திக் ராஜா இயக்குகிறார். 

இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் விஷூவல் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குநராகவும், அந்தப் படத்தின் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

 
Our Score