full screen background image

3 நாயகிகள் நடிக்கும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ திரைப்படம்!

3 நாயகிகள் நடிக்கும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ திரைப்படம்!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில், த்ரிகுண் மற்றும் ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜி. ராஜசேகர்,  இசையமைப்பாளர் அருணகிரி, ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ,  சுந்தரா டிராவல்ஸ் ராதா,  நடன இயக்குநர் ராதிகா, ஸ்ரீஜீத்தா கோஷ், நடிகை இனியா, தயாரிப்பாளர் அருண்  உள்ளிட்டோர் பேசினார்கள்.

நாயகன் த்ரிகுண் பேசும்போது, “எனக்கு ஊர் கோயம்புத்தூர்தான். ஜர்னலிசம் படிச்சேன். பிரகாஷ்ராஜ் கண்ணில்பட்டு, ‘இனிது இனிது’ படம் செய்தேன். காலேஜ் படிக்கும்போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த ‘டெவில்’ படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அந்த நேரத்தில்தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும். இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள்தான் செய்து வருகிறேன். அதனால் கண்டிப்பாக இந்தப் படம் செய்யலாம் என சொன்னேன்.

 

இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல் ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் விஜய்ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார், அவருக்கு நன்றி. ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும்..” என்றார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த உரையாடலில், நடிகர் த்ரிகுன் பேசும்போது, “நான் தமிழில் எமி ஜாக்சனுக்கு கணவனாகவும் நடித்துள்ளேன். ஆனால் அதெல்லாம் எனக்குப் பெருமை இல்லையே? அப்போது நடித்தேன். அவர் பெரிய நடிகை மகிழ்ச்சிதான். அதைத் தாண்டி எனக்கு என ஒரு பெயரை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். தெலுங்கைப் போல தமிழிலும் வளர வேண்டும்.


“படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்களே.. அவர்களுக்குள் ஈகோ சண்டை ஏதும் வரவில்லையா?” என்றால்..  “அதைத்தான் சார் படமாக எடுத்திருக்கிறோம், மூன்று பெண்களிடம் மாட்டும் ஹீரோ படாதபாடுபடுவதுதான் கதை, மற்றபடி இவர்கள் எல்லோரும் இனிமையானவர்கள்.

இது அடல்ட் காமெடி படம்.  படத்துக்கு தமிழில் பெயர் வைக்க முடிாததற்குக் காரணம்… தெலுங்கிலும் இப்படம் உருவாவதுதான். இரண்டுக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் வைத்தோம்..” என்றார்.

Our Score