full screen background image

‘சர்கார்’ படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

‘சர்கார்’ படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இயக்குநர் முருகதாஸ் மீது 4 சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழக குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மூன்றாண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தணிக்கை செய்த திரைப்படத்திற்குத் தடை விதிக்க முடியாது…” எனக் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். 

 
Our Score