கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ராஜ்குமாரின் பேத்தியான தன்யா ராம்குமாரும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.
ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு நடிகை ஆயிஷா போன்ற தோற்றத்தில் இருக்கும் தன்யாவுக்கு மிக அழகான முகவெட்டு இருப்பதால் தென்னிந்திய மொழிகளில் அவர் பிரவேசித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே தெரிகிறது.
தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். படத்தின் இயக்குநர், ஹீரோ யார் உள்ளிட்ட, விபரங்கள் வெகு விரைவில் வெளியாகுமாம். இதனை சஸ்பெனஸ் வைத்து சொல்கிறார் தன்யா ராம்குமார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் உங்களையும் நிச்சயமாக வாழ வைக்கும்..! வாம்மா மின்னலு..!!