full screen background image

பா.ரஞ்சித்திடம் பாராட்டைப் பெற்ற நாயகன் லிங்கேஷ்..!

பா.ரஞ்சித்திடம் பாராட்டைப் பெற்ற நாயகன் லிங்கேஷ்..!

பா.இரஞ்சித்தின் கபாலி’, ‘கஜினிகாந்த்’, ‘குண்டு’, ‘வி1’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் ‘காலேஜ் ரோடு’.

இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநரான  ஜெய் அமர்சிங் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், நாயகன் லிங்கேஷை பெரிதும் பாராட்டியிருக்கிறார். “மாணவர்களின் கல்விக் கடன் குறித்த அரசியலைப் பேசினாலும் கமர்சியலாகவும் இருக்கிறது. மாணவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும்…” என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இதனால் மகிழ்ச்சியான காலேஜ் ரோடு’ படக் குழுவினர் தற்போது படத்தை வெளியிடும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் லிங்கேஷ் காயல்’ என்ற இன்னொரு படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ காயத்ரி, பாடகர் ஸ்வாகதா கிருஷ்ணன், அனுமோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளரும், இயக்குநருமான தமயந்தியின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும், அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக பேசுவதுபோல் உருவாகியுள்ளது.

இந்தக் ‘காயல்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது.

“கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இனி கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பீர்களா..?” என்கிற கேள்விக்கு. “நான் ஒரு நடிகன். நடிக்க வந்திருக்கிறேன். இதில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பதுதான் என்னைப் போன்ற ஒரு நடிகனின் கடமை. இரண்டு படங்களில் கதா நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது.. நடித்தேன். 

இனிமேல் வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன். கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த கதாபாத்திரங்களில் நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ, அதைத்தான் இயக்குநர்கள் நமக்கு கொடுக்கப் போகிறார்கள்.

எனக்குப் பொருத்தமானதாக இருக்கும்பட்சத்தில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நான் நடிப்பேன். மொத்தத்தில் நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும். நான் எப்போதும் இயக்குநர்களின் நடிகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்…” என்றார் லிங்கேஷ்.

Our Score