full screen background image

அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்!

அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்!

அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ காட்டும் விஷயம் இதுதான்!

அபோகலிப்ஸ். அழிந்துபோன உலகம். அதிகாரத்துக்கான போட்டி. வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயான மோதல்.

இவற்றை மையமாக வைத்து ஒரு தமிழ் திரைப்படம் உருவாகிறது என்றாலே, அதன் பின்னணியில் என்ன மாதிரியான உலகம் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.

அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்.

‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கிய பா.இரஞ்சித், இந்த முறை முற்றிலும் வேறுபட்ட களத்துக்குள் சென்றிருக்கிறார்.

அவருடைய அடுத்தப் படமான ‘வேட்டுவம்’ ஒரு வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல், அபோகலிப்ஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படமாக உருவாகியுள்ளது.

படத்தின் கதைக் களம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘World of Vettuvam’ வீடியோ அந்த உலகத்தின் தன்மையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

வெவ்வேறு குழுக்கள், அவர்களுக்கிடையேயான அதிகாரப் போட்டி, மோதல்கள் என இந்த உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்கான சில முக்கியமான காட்சிகளையும் தகவல்களையும் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், இந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மொழிகளைக் கடந்து பல முன்னணி நடிகர்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது.

தமிழ் பதிப்புக்கு பா.இரஞ்சித்தே குரல் கொடுத்திருக்கிறார். இந்தி பதிப்பில் பங்கஜ் திரிபாதியும், தெலுங்கில் ராணா டகுபதியும், மலையாளத்தில் சௌபின் ஷாஹிரும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் குரல் கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் ‘வேட்டுவம்’ படத்தை ஒரு தமிழ் திரைப்படமாக மட்டுமே பார்க்காமல், இந்திய அளவில் பார்வையாளர்களை சென்றடையக் கூடிய படைப்பாக உருவாக்கும் முயற்சி தெளிவாகத் தெரிகிறது.

படத்தின் ஆக்ஷன் காட்சிகளும் தனி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, ‘அடிமுறை’ மற்றும் ‘மால்கம்’ போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதற்காக படத்தில் நடித்துள்ள நடிகர்கள் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் திரையில் வழக்கமான சினிமா சண்டைக் காட்சிகளுக்குப் பதிலாக, கதாபாத்திரங்களின் உடல் இயக்கத்தோடு இயல்பாகப் பொருந்தக் கூடிய ஆக்ஷனை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

குறிப்பாக, ‘வேட்டுவம்’ படத்தின் உலகத்தை உருவாக்குவதில் கலை இயக்கமும் ஒளிப்பதிவும் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன என்பதற்கான தடயங்களை ‘World of Vettuvam’ வீடியோ கொடுக்கிறது.

அழிவுக்குப் பிறகு உருவான ஒரு உலகில் மனிதர்களின் அதிகாரப் போட்டி எப்படி இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில் இப்படத்தின் காட்சியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், Neelam Productions மற்றும் Learn and Teach Production இணைந்து தயாரிக்கும் இந்த ‘வேட்டுவம்’, படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்தின் முழுமையான கதையை வெளிப்படுத்தாமல், அதன் உலகத்தை மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் ‘World of Vettuvam’ வீடியோ, ‘வேட்டுவம்’ எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கப் போகிறது என்ற கேள்வியை மேலும் பெரிதாக்கியுள்ளது.

இப்போது ரசிகர்களிடம் இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுதான்…

அழிந்துபோன அந்த உலகில் ‘வேட்டுவம்’ யாருடைய கதை?

“இந்தக் கேள்விக்கான விடை தெரிய காத்திருங்கள்” என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

An apocalyptic world, rival factions, power struggles and intense action — Pa. Ranjith’s upcoming film Vettuvam appears to be taking Tamil cinema into a completely new cinematic territory.

While the film’s complete storyline is still under wraps, the recently released ‘World of Vettuvam’ video offers a glimpse into the universe created by the filmmaker. Rather than revealing the plot, the video introduces the world in which the story unfolds, leaving audiences curious about what lies beneath its mysterious setting.

Directed by Pa. Ranjith, Vettuvam is being produced by his Neelam Productions in association with Learn and Teach Production.

The film is set against an apocalyptic backdrop and revolves around conflicts and rivalries between different groups. Their struggle for power and survival leads to a series of unexpected events, forming the core of this action-driven world.

What makes Vettuvam particularly intriguing is the effort that has gone into creating its distinct visual universe. The film promises large-scale action sequences and an unconventional setting that appears to be significantly different from the worlds explored by Ranjith in his earlier films.

The action choreography is another major highlight. The fight sequences have been designed using elements of traditional martial arts, including Adimurai and Malakham. The actors underwent dedicated martial arts training as part of the preparation for the film, with the intention of bringing a greater sense of realism and physicality to the action.

The film features an ensemble cast comprising Arya, Dinesh, Shabeer, Sobhita Dhulipala and Kalaiyarasan, among others.

The multilingual approach of Vettuvam has also added to its pan-Indian appeal. The ‘World of Vettuvam’ video has been released in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada.

Pa. Ranjith has lent his voice to the Tamil version, while Pankaj Tripathi has voiced the Hindi version, Rana Daggubati the Telugu version, Soubin Shahir the Malayalam version and Kiccha Sudeep the Kannada version.

This multilingual presentation gives audiences across different regions an entry point into the world of Vettuvam, even before the film itself arrives in theatres.

The technical crew includes Art Director S.S. Moorthy, Cinematographer Rupesh Shahji, Editor Selva R.K., Music Composer G.V. Prakash Kumar and Stunt Director Dilip Subbarayan.

With its post-apocalyptic setting, elaborate world-building and martial-arts-based action, Vettuvam is shaping up as a different kind of commercial action film from Pa. Ranjith.

The newly released ‘World of Vettuvam’ video deliberately reveals only a glimpse of this universe, rather than giving away the complete story. And that perhaps leaves audiences with the biggest question of all:

In this world after the apocalypse, whose story is ‘Vettuvam’ really telling?

Our Score