‘வாலிபராஜா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல் கேஸட்டை பெற்றுக் கொண்ட ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி.ஆனந்த் கமல்ஹாசன் பற்றி சொன்ன ஒரு விஷயம் கூட்டத்தினர் அனைவரையும் கவர்ந்தது..
‘தேவர் மகன்’ படத்துல கமல் ஸாரோட ஒர்க் பண்ணும்போது அவரோட டெடிகேஷன்.. நடிகரா ஒரு ஆர்வம்.. தயாரிப்பாளரா இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்.. இதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..
அந்தப் படத்துல தேர் வெடிக்கிற காட்சி ஒண்ணு வரும். அதுல அதிகப்படியான மக்களைக் கூட்டுறதுக்கு ‘சுமாரா மூவாயிரம் பேர் வேணும்..’ என்றார் கமல். ஆனால் முதல் நாள் ஷூட்டிங்கில் ஆயிரம் பேரை மட்டுமே திரட்ட முடிந்தது. வெறும் பார்வையிலேயே கூட்டம் கம்மியா இருக்கேன்னு கண்டுபிடிச்ச கமல் ஸார்.. அன்னிக்கு ஷூட்டிங்கை அப்பவே கேன்சல்ன்னு சொல்லிட்டாரு. ‘நான் சொன்னா மாதிரி மூவாயிரம் பேர் கண்டிப்பா வேணும்’னுட்டாரு. அன்னிக்கு வந்த அத்தனை பேரும் சோறு போட்டு, காசு கொடுத்து அத்தனையும் வேஸ்ட்டு.
மறுபடியும் மூவாயிரம் பேரையும் திரட்டிக் காண்பிச்ச பின்னாடிதான் அந்தக் காட்சியை ஷூட் செஞ்சோம்.. இதுதான் கமல் ஸார்.. ஒரு நடிகரா மட்டுமில்லாமல், ஒரு தயாரிப்பாளராவும் எந்த விஷயத்திலேயும் காம்பரமைஸ் செய்யாதவர்..” என்று பாராட்டித் தள்ளினார்.