full screen background image

பாடலாசிரியராக மாறிய ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்..!

பாடலாசிரியராக மாறிய ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்..!

பிரபல இயக்குநர் சி.எஸ்.அமுதன் திரைப்படப் பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தில்தான் சி.எஸ்.அமுதன் பாடல் எழுதியுள்ளாராம்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த அனேகன் திரைப்படத்தின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. படத்தின் இசை வெகு விரைவில் வெளிவரவுள்ளது. ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ்தான் கே.வி.ஆனந்தின் இந்தப் படத்திற்க்கும் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை பற்றி இயக்குனர் ஆனந்த் கூறுகையில், “இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் கதையின் தன்மையையும் காட்சியையும் பொறுத்து வெவ்வேறு பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மென்பொருள் ஊழியர்கள், வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நினைப்பார்கள். அவர்களின் மனநிலை அறிந்து அந்த சிச்சுவேஷனில் பாடலை எழுதும் பாடலசிரியர் வேண்டும் என்று நினைத்தேன். அப்போது C.S.அமுதன் நினைவுக்கு வந்தார்.

ஏனெனில், அவர் இயல்பாகவே மிகவும் ஜாலியான நபர். சில வருடங்களுக்கு முன், விளம்பரப் படங்களில் பணியாற்றிய நேரத்தில் நான் அவரைச் சந்தித்துள்ளேன். அப்போது அந்த விளம்பரப் படங்களுக்காக அமுதன் பாடல்களை எழுதியதையும் நான் அறிவேன்.. இப்போது இந்தப் படத்தின் பாடல் பற்றிய சிந்தனையில் உடனேயே அமுதனின் நினைவு வந்தது. அவரை அழைத்து எழுத வைத்துள்ளேன்.. தமிழ்ப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த பெயர் போலவே, இந்த ஒரு பாடலின் மூலமும் அவர் நிச்சயம் பேசப்படுவார்..” என்றார்.

அமுதன் தற்போது ‘இரண்டாவது படம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது விரைவில் வெளிவர இருக்கிறது..!

Our Score