நயன்தாரா அடுத்த வாரம் தலைப்புச் செய்தியாகவிருக்கிறார். இதுவரையிலும் அவர் நடித்த தமிழ்ப் படங்களின் இசை வெளியீடு மற்றும் பிரஸ் மீட்டுகளுக்கெல்லாம் மட்டம் போட்டவர், இப்போது அவர் நடிக்காத ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறாரென்றால் அவருக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்த தயாரிப்பாளர்களெல்லாம் இளிச்சவாயர்களா..?
அப்படியென்ன இந்தப் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் என்கிறீர்களா..? இது நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம். ‘அமரகாவியம்’. ஆர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்புள்’ கம்பெனிதான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில்தான் நயன்தாரா கலந்து கொண்டு இசையை வெளியிட அவருடைய தோழியான நடிகை திரிஷா பெற்றுக் கொள்கிறாராம்.
ஆர்யாவின் தம்பி சத்யாதான் இதில் ஹீரோ. மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடிக்கிறார். ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் 80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி உள்ளது. தனக்குக் கிடைத்திருக்கும் பெயருக்கும் புகழுக்கும் மறைந்த தன்னுடைய குருவான ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாதான் காரணம் என்கிறார் அவருடைய பெயரை தன் பெருடன் இணைத்துள்ள இயக்குநர் ஜீவா சங்கர்.
ஆர்யா கூப்பிட்டும் வரலைன்னா எப்படி..? இனிமேல் எல்லா தயாரிப்பாளர்களும் ஆர்யா மாதிரி மாறிட வேண்டியதுதான்..!